44 ஆயிரத்தை தாண்டிய ஆபரணத் தங்கத்தின் விலை – கொரோனவால் கிடுகிடு உயர்வு..!

0

லகமே கொரோனாவின் தாக்கம் எப்போது குறையும். இன்னும் எத்தனை பேரை பலி வாங்கும். இது எப்போது தான் குறையும். பொருளாதாரம் என்னவாகும் என்ற பல கேள்விகள் நம் மனதில் எழுந்து வருகின்றன. ஆனால் அதற்கு இன்று வரை யாரும் சரியான பதில் கூற இயலவில்லை என்பதே உண்மை.அதுவும் கற்பனையில் கூட நினைத்துக் பார்த்திராத நிலையில் பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என்ற அளவுக்கு கொரோனா பொருளாதாரத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனால் அமெரிக்கா ஆட்டம்

கொரோனாவின்  ஆட்டம் அமெரிக்காவில் அதிகரித்து வரும் அதே நேரத்தில், வேலையின்மையும் அதிகரித்து வருகிறது. இந்த தாக்கத்தினை குறைக்கவும், மக்கள் நலனுக்காகவும் அமெரிக்கா பல அதிரடி திட்டங்களை செய்து வருகிறது. மேலும் பொருளாதாரத்தினை உயர்த்தவும் பல அதிரடியான திட்டங்களை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலையானது ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. அது மட்டும் அல்ல, பொருளாதாரம் மீண்டு வர சில மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மீண்டு வந்த பின்னரும் கூட, முடங்கிய தொழில்கள் புத்துயிர் பெற பல மாதங்கள் ஏன் ஆண்டுகள் கூட ஆகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மீண்டு வரும் பங்குச் சந்தை

பங்குச் சந்தைகள் நிலவரம் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றம் காணத் தொடங்குகின்றன. இந்தியாவில் இப்போது தான் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமடையத் தொடங்கி இருக்கின்றன. ஆனால் தங்கத்துக்கு எதை பற்றி கவலை இல்லை.விலை ஏறிக் கொண்டு இருக்கிறது.

ஏறும் டாலர் மதிப்பு

கொரோனா என்னும் வைரஸால் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் பெரும் உச்சத்தை எட்டியுள்ளது,இதைபோல இந்தியாவில் எம் சி எக்ஸ் ஃப்யூச்சர்ஸ் காண்டிராக்டின் விலையும் புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. ஆனால், சென்னையில் ஆபரணத் தங்கம் இன்னும் தன் வரலாற்று உச்சத்தைத் தொடவில்லை என கூறப்படுகிறது.ஒரு அவுன்ஸ் தங்கம் சர்வதேச சந்தையில் பெரும் அளவில் 1,680 டாலரைத் தாண்டி 1,696 டாலரைத் தொட்டு இருக்கிறது.

சர்வதேச தங்கத்தின் விலை அதிகரித்தால் இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரித்து விடும். அதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன.டாலர் போதாக்குறைக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வேறு 76.29 ஆக இருக்கிறது. ஒரு காலத்தில் 74 ரூபாய்குக் கீழ் வர்த்தகமாகிக் கொண்டு இருந்த இந்திய ரூபாய் மதிப்பு தற்போது 76 ரூபாய்க்கு மேல் இருப்பது, ஒட்டு மொத்தமாகவே இறக்குமதியில் இந்தியாவை பாதிக்கும். குறிப்பாக தங்கத்தின் விலையிலும் கடுமையாக எதிரொலிக்கும். எனவே சென்னையில் விலை ஏற்றத்தை எதிர்பார்க்கலாம்.

தடதட என ஏறும் தங்கத்தின் விலை

எம் சி எக்ஸ் ஃப்யூச்சர்ஸ் இந்தியாவின் கமாடிட்டி சந்தையான எம் சி எக்ஸில், ஜூன் 2020 மாதத்துக்கான, 24 கேரட் 10 கிராம் ஃப்யூச்சர்ஸ் காண்டிராக்ட் விலை, கடந்த வியாழக் கிழமை (ஏப்ரல் 09, 2020) விலை 45,302 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. கடந்த ஏப்ரல் 07, 2020 அன்று உச்ச விலையாக 45,724 ரூபாயைத் தொட்டதும் குறிப்பிடத்தக்கது.

விலை ஏற்றம் இந்த 45,724 ரூபாய் என்பது சமீப காலங்களில் இல்லாத மிகப் பெரிய விலை ஏற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு ஆகஸ்ட் 2020 மாத ஃப்யூச்சர்ஸ் காண்டிராக்டும் 45,500 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்தியாவின் எம் சி எக்ஸ் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்ட்கள் விலை ஏற்றத்தை உறுதி செய்வதாக எடுத்துக் கொள்ளலா

சென்னையிலும் விலை அதிகரிக்கலாம்

ஆபரணத் தங்கம் மேலே சொன்ன காரணங்கள் எல்லாமே, சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையை அதிகரிக்கச் செய்திருக்கின்றன. இன்று, சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 44,542 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது என்பது கவனிக்க வேண்டி இருக்கிறது. விலை ஏறலாம் கொரோன வைரஸால் தங்கம் விலை ஏறும் என்கிற செண்டிமெண்ட், சர்வதேச தங்க விலை 1,696 டாலரைத் தொட்டு இருப்பது, எம் சி எக்ஸ் சந்தையில் இந்திய தங்க ஃப்யூச்சர்களின் விலை 45,000-த்தை தொட்டு இருப்பது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 76 ரூபாய்க்கு மேலேயே இருப்பது போன்ற காரணங்களால் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரிக்கலாம்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here