மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.,, இனி நகை வாங்குறது கஷ்டம் தான்! தீபாவளி அதுவுமா இப்படி ஆயிருச்சே!!

0
மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.,, இனி நகை வாங்குறது கஷ்டம் தான்! தீபாவளி அதுவுமா இப்படி ஆயிருச்சே!!

சென்னையில் நேற்று முன் தினம் தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்த நிலையில், நேற்று திடீரென சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

தங்கம் விலை;

உலகச் சந்தையில், அமெரிக்க டாலர் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த அடிப்படையில், தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இருப்பினும் நேற்று முன்தினம் தங்கம் விலை கணிசமான சரிவை சந்தித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது நேற்று முன்தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4610 க்கு விற்பனையானது. இதன் அடிப்படையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.36,880 க்கு விற்பனையானது. அன்றைய தினம் தங்க நகைகளை வாங்க நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா.,65.44 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை – பொதுமக்கள் பீதி!!

இந்நிலையில் நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தரும் விதமாக நேற்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15 அதிகரித்து, ரூ. 4,625 ஆகவும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்து, ரூ.37,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.மேலும் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,045 என சவரனுக்கு ரூ. 40,360 ஆக விற்பனையானது. இதையடுத்து வெள்ளியின் விலையில் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ.60 க்கு விற்பனையானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here