தங்கம் விலை கிடுகிடு உயர்வு.,,ஒரே நாளில் உச்சம்.,வேதனையில் நகைப்பிரியர்கள்!!

0
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(30.10.2023) – முழு விவரம் உள்ளே!!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(30.10.2023) – முழு விவரம் உள்ளே!!

தங்கம் விலையானது சமீபத்திய வாரங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இந்நிலையில் நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் தங்கம் விலையானது கடந்த 2 நாட்களாக உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.

கிடுகிடு உயர்வு:

தமிழக குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதாவது அனைத்து முக்கியமான பண்டிகைகளுக்கும் மக்கள் தங்கத்தை வாங்குவதை வழக்கமாகிவிட்ட நிலையில், தற்போது தீபாவளி நெருங்கி வரும் இந்த சமயத்தில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. விலை உயர்வால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனால், நகை வாங்குவோர் இடையே ஒரு குழப்பமான நிலை இன்னும் நீடித்து வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

நொடி பொழுதில் தாலி கட்டும் கோபி.., ராதிகாவை கேவப்படுத்தி மானத்தை வாங்கிய ஈஸ்வரி!!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.38,680 ஆக விற்பனையாகிறது. மேலும் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ 4,835 ஆக விற்பனையாகிறது. இதையடுத்து தங்கத்திற்கு இணையாக வாங்கப்படும் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.67 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து 38,200‬ ரூபாய்க்கும், இதேபோன்று ஒரு கிராம் தங்கம் 4,775 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இப்படி தங்கம் விலை உச்சம் தொட்டு வந்தால் சாமானிய மக்களுக்கு தங்க நகைகள் வாங்குவது எட்டாக்கனியாக மாறிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here