மீனவரை கோடீஸ்வரராக மாற்றிய தங்க இதய மீன்கள் – மஹாராஷ்டிராவில் நடந்த சுவாரஸ்யம்!!

0

மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு மீனவரின் வலையில் சிக்கிய தங்க இதய மீன்களால் ஒரே நாளில் அவர் கோடீஸ்வராக மாறியுள்ளார்.

தங்க இதய மீன்கள்:

மாநிலங்களில் உள்ள கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒரு குறிப்பிட்ட நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அந்தந்த மாநில அரசால் அறிவிக்கப்படும்.  அந்த குறிப்பிட்ட நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் இப்படி குறிப்பிட்ட சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா அரசு அங்குள்ள கடலில் இந்த தடைக்காலத்தை விதித்திருந்தது. இதனை அடுத்து முடிவு பெற்ற  தடைக்காலத்தை அடுத்து மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர்.

அதில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரகாந் தாரே என்பவரும் அவரது மீனவ தோழர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.  அதில் அவர்கள் வீசிய வலையில் “கோல்” எனப்படும் “தங்க இதய மீன்கள்” சிக்கியது.  இந்த மீன்கள் மருத்துவத்துறையில் மிக பெரிய அளவில் பயன்படும் என்பதால் இதன் மீது அயல் நாடுகளில் தவிர்க்க முடியாத தேவை இருந்து வருகிறது.  இதனை அடுத்து வலையில் சிக்கிய பெரிய அளவிலான 157 மீன்களுடன் மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.

கரைக்கு வந்த பிறகு சந்திரகாந்த் மற்றும் அவரது நண்பர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  இந்த தங்க மீன்களின் விலை ஒரு கிலோ 5000 ரூபாய் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது.  இதையடுத்து, அவர்களிடம் இருந்த 157 மீன்களும் ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  இதனால், மீன்பிடி தடை காலத்திற்கு அடுத்த முதல் நாளே தங்கள் அனைவரையும் கோடீஸ்வரர்களாக இந்த கோல் மீன்கள் மாற்றி இருப்பதாக நன்றியுடன் மீனவர்கள் தெரிவித்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here