அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளியின் விலை – நகை வாங்க இதுதான் சரியான நேரம்!!

1

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை, இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. இன்றும் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 280 ரூபாய் குறைந்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாட்களில் விலை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளதால் நகை வாங்க இதுவே சரியான தருணம் என கூறப்படுகிறது.

தங்கத்தின் விலை:

உலகம் இதுவரை பல தரப்பட்ட பேரழிவுகளை சந்தித்து உள்ளது. சுனாமி, நில நடுக்கம், கொரோனா வைரஸ் என பல்வேறு தாக்குதல்களினால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும் எப்பொழுதும் மதிப்பு குறையாத ஆபரணம் என்றால் அது தங்கம் தான். இதனாலேயே இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது தனிப்பிரியம் உள்ளது. எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும் தங்க நகைகள் இன்றி நிறைவு பெறாது. அவசர காலத்தில் அடகு வைக்கவும், வாங்கிய விலையை விட பெரிதளவு நஷ்டம் இல்லாமல் மீண்டும் விற்கவும் தங்க நகைகள் உகந்தவை.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

gold jewels
gold jewels

பிற நாடுகளில் வெறும் முதலீட்டு பொருளாக பார்க்கப்படும் தங்கம், ஆசிய நாடுகளில் தான் முக்கிய ஆபரணப் பொருளாக உள்ளது. மேலும் அதன் மதிப்பு காரணமாக கொரோனா ஊரடங்கு காலத்திலும் முதலீடுகள் கிடுகிடுவென உயர்ந்தன. இதன் காரணமாக அதன் தேவை அதிகரித்து விலையும் பன்மடங்கு உயர்ந்தது. இதனால் தங்க நகை வாங்குவது என்பது நடுத்தர, ஏழை குடும்பங்களுக்கு ஒரு கனவாக தான் இருக்கும் என்றெல்லாம் கூறப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை சற்று குறைந்து கொண்டே வருவது பொதுமக்களுக்கு சற்று நிம்மதி அளிப்பதாக உள்ளது.

பிக்பாஸில் இந்த 2 கவர்ச்சி புயல்களும் கலந்து கொள்வது உறுதி – ரசிகர்கள் உற்சாகம்!!

இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.35 குறைந்து 4,880 ரூபாய்க்கும், ஒரு சவரன் ரூ.280 சரிந்து ரூ.39,040க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக குறைந்து உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3.40 குறைந்து ரூ.65.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here