Thursday, April 25, 2024

அதிரடி விலை உயர்வுடன் 2020ஆம் ஆண்டை நிறைவு செய்த தங்கம் – பொதுமக்கள் கலக்கம்!!

Must Read

ஆண்டின் கடைசி நாளான இன்று கூட தங்க விலை அதிரடியாக   உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே தங்க விலை அதிரடியாக உயர்ந்து மக்களை அதிக அளவில் கவலை கொள்ள வைத்தது. அதே போல் இன்றும் உயர்ந்துள்ளது.

கொரோனா பரவலால் ஏற்றம்:

இந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்கள் செயல்படாததால் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்தது. அனைவரின் கவனமும் தங்கம் மீது திரும்பியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒட்டுமொத்தமாக அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்ததால் தங்க விலை அதிரடியாக உயர்ந்தது. இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்தே தங்க விலை உயர்ந்து தான் வந்தது. இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கம் ஆண்டின் கடைசி நாளான இன்றும் அதிகரித்துள்ளது.

இன்றைய தங்க விலை நிலவரம்:

சென்னையில் ஆபரண தங்கம் (22 கேரட்) ஒரு சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து 37,792 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிராம் 12 ரூபாய் அதிகரித்து 4,724 ரூபாய் என்று விற்கப்படுகிறது. தூய தங்கம் ஒரு கிராம் 5,115 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது.

#சிட்னி டெஸ்டில் நடராஜனுக்கு வாய்ப்பு?? வெளியான தகவல்!!

ஒரு சவரன் 40,930 என்று விற்பனை செய்யப்படுகின்றது. வெள்ளி ஒரு கிராம் 30 காசுகள் குறைந்து 72.30 என்றும் ஒரு கிலோ 72,300 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -