Thursday, April 25, 2024

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்க விலை – மக்கள் கவலை!!

Must Read

தமிழகத்தில் தங்கத்தின் விலை மாறி மாறி ஏற்ற இறக்கங்களோடு இருந்து வருகின்றது. நேற்று தடாலடியாக குறைந்து வந்த தங்க விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கு கவலை அடைந்துள்ளனர்.

தங்கம் மற்றும் வெள்ளி:

தங்கம் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களோடு இருந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் தொழில் முனைவோர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்தனர். இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்து வந்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனால் அனைத்து தரப்பு மக்களும் தங்கம் வாங்க முடியாமல் தவித்தனர். பண்டிகை காலங்களில் கூட தங்க விலை உயர்ந்து தான் வந்தது. பின், படிப்படியாக குறைந்து வந்தது. இதற்கிடையில் நேற்று அதிரடியாக குறைந்த தங்க விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. தமிழ் மாதமான தை துவங்க உள்ளதால் சிலர் சுப நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு இருந்திருப்பர். இந்த தங்க விலை மாற்றத்தால் கவலை அடைந்துள்ளனர்.

இன்றைய தங்க விலை நிலவரம்:

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் (22 கேரட்) ஒரு சவரன் 144 ரூபாய் உயர்ந்து ரூ.37,032 என்ற விலை நிலவரத்தில் உள்ளது. ஒரு கிராம் 18 ரூபாய் உயர்ந்து ரூ.4,629 என்று விற்பனை செய்யப்படுகிறது. தூய தங்கம் (24 கேரட்) ஒரு கிராம் 18 ரூபாய் உயர்ந்து ரூ.5,014 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி & அண்ணா பல்கலையில் பரவும் கொரோனா – கல்லூரிகளில் காய்ச்சல் முகாம் நடத்த திட்டம்!!

ஒரு சவரன் தங்கம் 144 ரூபாய் உயர்ந்து ரூ.40,122 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளியின் விலையும் நேற்றைய விலையை விட உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.30 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.67,300 என்று விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -