Wednesday, April 24, 2024

தொடர்ந்து உயரும் தங்க விலை – கவலையில் மக்கள்!!

Must Read

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் அனைத்து தரப்பு மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று அதிரடியாக உயர்ந்த தங்க விலை இன்றும் உயர்ந்துள்ளது.

கொரோனா பொது முடக்கம்:

கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் நாடு முழுவதிலும் அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில் துறைகள் அனைத்தும் முடங்கின. இதன் விளைவாக பங்குசந்தையும் சரிவடைந்தது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு இன்று தீர்ப்பு – தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு!!

இதனால் பல முதலீட்டாளர்களும் தங்களது தொழில் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால் பொதுமக்கள் ஊரடங்கு காலத்தில் தங்கம் வாங்கவில்லை என்று கூறப்பட்டாலும் தங்கவிலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து உயர்ந்தது:

நாளுக்கு நாள் தங்கவிலை அதிகரித்து வந்தது. அவ்வப்போது குறைந்து வந்தாலும் ஏறிய வேகத்தில் குறையவில்லை. முந்தைய வாரங்களில் தங்கவிலை தொடர்ந்து 4 நாட்களாக குறைந்து வந்தது. இதனால் சுபநிகழ்ச்சி நடத்துவோர், தங்கம் வாங்க நினைப்போர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், நேற்று தங்க விலை அதிரடியாக உயர்ந்தது. மாலையும் தங்கவிலை உச்சம் அடைந்தது. அதே போல் இன்றும் தங்க விலை உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கவலை அடைந்துள்ளனர்.

இன்றைய விலை நிலவரம்:

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து 38,672 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் கிராம் ஒன்றிற்கு 16 ரூபாய் உயர்ந்து 4,834 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்க விலை நிலவரத்தை போல் தான் வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று கிராம் ஒன்றிற்கு 30 காசுகள் உயர்ந்து 64.60 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி 64,600 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.  இந்த விலை நிலவரத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா டெல்லி?? குஜராத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 24) அருண் ஜெட்லி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -