இந்திய முன்னாள் வீரருக்கு கோவா அரசு நோட்டீஸ்…, ஒரு ட்வீட்டர் பதிவால் வந்த சோகம்!!

0
இந்திய முன்னாள் வீரருக்கு கோவா அரசு நோட்டீஸ்..., ஒரு ட்வீட்டர் பதிவால் வந்த சோகம்!!
இந்திய முன்னாள் வீரருக்கு கோவா அரசு நோட்டீஸ்..., ஒரு ட்வீட்டர் பதிவால் வந்த சோகம்!!

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்க்கு, ஒரு பிரச்சனை காரணமாக கோவா அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

யுவராஜ் சிங்:

இந்திய அணியின் சிக்ஸர் மன்னர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது முன்னாள் வீரரான யுவராஜ் சிங் தான். இவர், டி20 மற்றும் ஒருநாள் உலக கோப்பைகளை வென்ற போது இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். இதற்கிடையில், புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர், மீண்டு வந்து அணியில் இடம் பிடித்து காட்டி, இளம் தலைமுறைக்கு சிறந்த மோட்டிவேட்டராக திகழ்ந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

2017 ஆண்டில் சர்வதேச தொடரில் இருந்து விலகிய இவர், ஐபிஎல் இருந்து 2019ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதன் பின், பல்வேறு விளம்பரங்களில் நடித்தும், தனியார் தொழில்களில் முதலீடு செய்தும் வந்தார். சமீபத்தில், இவர், கோவாவில் தனக்கு சொந்தமான சொகுசு வீட்டை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடுவதாக திட்டமிட்டிருந்தார். இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு சொந்தமான காசா சிங் வீட்டில் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட பல நினைவுகள் உள்ளன.

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிரான்ஸ்…, கோல் மழை பொழிந்து அசத்தல்!!

இதனை காண வேண்டுமானால், உடனே புக் செய்யுங்கள் என்று பதிவிட்டிருந்தார். இது தான், தற்போது யுவராஜ் சிங்குக்கு பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. அதாவது, கோவாவில் ஒரு விடுதி தொடங்க வேண்டும் என்றால், முன்கூட்டியே அரசிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், யுவராஜ் சிங் இதனை செய்யாததால், கோவாவின் சுற்றுலா துறை இயக்குனர், டிசம்பர் 8ம் தேதி நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மீறினால் 1லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here