கோவாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி – சில கட்டுப்பாடுகளுடன்..!

0
goa

இந்தியாவின் பிரபல சுற்றுலாத்தனமான கோவாவில் 4 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவ சான்றிதழ் அவசியம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோவா சுற்றுலா:

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கோவாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு நான்கு மாதங்கள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கோவா அரசு தனது சில ஹோட்டல்களையும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளையும் இன்று முதல் மீண்டும் திறந்துள்ளது. கோவா சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மனோகர் கூறியதாவது, “கோவாவில் இன்று (ஜூலை 2) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க 250 ஹோட்டல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சுற்றுலா பயணி கோவாவிற்குள் நுழைய, அவர் / அவள் கொரோனா தொற்று இல்லை என 48 மணி நேரத்திற்குள் சோதனை செய்த சான்றிதழை கொண்டு செல்ல வேண்டும் அல்லது கோவாவில் கட்டாயமாக சோதனை செய்ய வேண்டும்”.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Goa Beach
Goa Beach

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பப்ஜி (PUBG) கேம் – என்ன காரணம்??

நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கோவா, மார்ச் மாதம் முதல் சுற்றுலா பயணிகள் நுழைய தடை விதித்து இருந்தது. தற்பொழுது சுற்றுலா நடவடிக்கைகளை மறுதொடக்கம் செய்வதற்கான முடிவு மாநில அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது.கோவா சுற்றுலாத் துறை இதுவரை 250 ஹோட்டல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது, இது மாநில அரசு விதித்துள்ள நிலையான இயக்க நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) ஏற்ப செயல்பட முடியும் என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here