சர்வதேச அளவில் கொரோனா பரவல் தொடங்கி 4 வருடங்கள் ஆகியும் இன்றளவும் சில நாடுகளில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து சர்வதேச நாடுகளுக்கு பரவிய கொரோனாவை பெரும்பாலான நாடுகள் தடுப்பூசி, ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர்.
இதையடுத்து இதுவரை உலக அளவில் சுமார் 68.24 கோடி பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதில் 6.8 கோடி பேர் உயிரிழந்துள்ளதாகவும், 65.53 கோடி பேர் குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஒமிக்ரான் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களுடன் வைரஸ் உருமாறி வருவதால் சீனா, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளில் பாதிப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனால் சுமார் 20.2 கோடி பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் சீனாவின் வுகான் நகரில் உள்ள பரிசோதனை ஆய்வு கூடத்தில் இருந்து தான் வெளிவந்தது என அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டி வருவதை சீன அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. எனவே கொரோனா பரவலுக்கு மூலகாரணமாக இருப்பது யார்? என்பது குறித்து உளவியல் துறை ஆராய்ந்து வருகிறது.