தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய டெண்டர் – முதல்வர் உத்தரவு!!

0

கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிற நிலையில் தடுப்பூசி அவசியமாகியுள்ளது. தற்போது தடுப்பூசி பற்றாக்குறையினால் தடுப்பூசி கொள்முதல் செய்ய உலகளாவிய டெண்டர் கோர தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வரின் அதிரடி நடவடிக்கை:

கொரோனா கால கட்டத்தில் மக்களின் உயிர் காப்பதில் தடுப்பூசி பெரும் பங்கு வகிக்கிறது. தற்போது தடுப்பூசியின் பற்றாக்குறையினால் கொள்முதல் செய்ய உலகளாவிய டெண்டர் கோர தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் தமிழகத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டள்ளதால் முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்று, தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 280 டன்னிலிருந்து 419 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஆக்ஸிஜன் தேவை அதிகமாகியுள்ளதால் போதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை உடனடியாக அமைத்திடவும், பிற மாநிலங்களில் உள்ள எக்கு உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து தமிழகத்திற்கு ரயில்கள் மூலமாக ஆக்சிஜனை கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் கொரோனா தயடுப்பு பணிகளை தமிழகமுதல்வர் தீவிரமாக எடுத்துவருகிறார். முதல்வரின் இந்த முடிவுகளில் மக்கள் மிகுந்த நெகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here