நீச்சல் உடையில் நயன்தாரா இருந்தால் அது கவர்ச்சியாக தெரியாது – பிரபல கவர்ச்சி நடிகை பேட்டி!!!

0
நீச்சல் உடையில் நயன்தாரா இருந்தால் அது கவர்ச்சியாக தெரியாது - பிரபல கவர்ச்சி நடிகை பேட்டி!!!

ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படங்களில் கவர்ச்சி நடனமாடிய பிரபல நடிகை டிஸ்கோ சாந்தி தற்போது நயன்தாராவை குறித்து ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். தற்போது இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

டிஸ்கோ சாந்தி

கமல் மற்றும் ரஜினி உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியவர் தான் டிஸ்கோ சாந்தி. இது மட்டுமில்லாமல் சில்க் ஸ்மிதாவுடன் சேர்ந்தும் சில பாடல்களில் கவர்ச்சி நடனமாடி இருக்கிறார். இந்நிலையில் நயன்தாரா குறித்து ஒரு பேட்டியில் டிஸ்கோ சாந்தி சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது, உடை என்பது ஒரு நடிகையை எந்தவிதத்திலும் தவறான கண்ணோட்டத்தில் காட்டாது என கூறியுள்ளார்.

இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டையும் கூறியுள்ளார். அதாவது பில்லா திரைப்படத்தில் நயன்தாரா நீச்சல் உடையில் வந்திருப்பார். அந்த உடையில் நயன்தாராவை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவே முடியாது. தவறான கண்ணோட்டத்தில் அதனை பார்த்தால் கூட அந்த அளவுக்கு அந்த புகைப்படத்தில் கவர்ச்சி எதுவும் இருக்காது. ஆனால், உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு டைட்டான ஆடைகளை உடுத்தி இருந்தால் பார்ப்பதற்கு மிகவும் கேவலமாக இருக்கும் என டிஸ்கோ சாந்தி தெரிவித்துள்ளார். நயன்தாராவை எடுத்துக்காட்டாக கூறிய இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here