தமிழகத்தில் 1,448 சிறுமிகள் குழந்தை பெற்றெடுத்த அவலம்., அதுவும் இந்த மாவட்டத்திலா? திடுக்கிடும் தகவல்!!!

0
தமிழகத்தில் 1,448 சிறுமிகள் குழந்தை பெற்றெடுத்த அவலம்., அதுவும் இந்த மாவட்டத்திலா? திடுக்கிடும் தகவல்!!!

தமிழகத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க Child ஹெல்ப்லைன் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் இன்னும் ஒரு சில கிராமப்பகுதிகளில் போலீசாருக்கு தெரியாமல், சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் அவலம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில், கடந்த 34 மாதங்களில் 1,448 சிறுமிகள் குழந்தை பெற்றெடுத்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இவர்களில் பலரும் பள்ளி, கல்லூரிகளை இடைநிற்றல் செய்துள்ளதாகவும், அதிகபட்சமாக மேலப்பாளையம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் 88 சிறுமிகள் குழந்தை பெற்றெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவல் பலர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பாமக அன்புமணி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.,10 ஆண்டு பிரச்சனைக்கு தீர்வு? EB அறிவித்த முக்கிய அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here