பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் மானியத்தொகை., இதுதான் தகுதி? ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா!!!

0
பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் மானியத்தொகை., இதுதான் தகுதி? ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா!!!

நாடு முழுவதும் பெண் சிசுக் கொலையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பெண் குழந்தையின் நிதி பாதுகாப்பை ஊக்குவிக்கும் விதமாக பாக்ய லக்ஷ்மி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 2006 மார்ச் 31க்கு பிறகு பிறந்த பெண் குழந்தைகள், 21 வயதை எட்டும் போது ரூ.2 லட்சம் மானியத் தொகை வழங்கப்படும்.

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு.., நெறிமுறைகளை வெளியிட்ட அரசு தேர்வுகள் இயக்ககம்!!!

இருந்தாலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாகவும், குழந்தை தொழில் ஈடுபட கூடாது உள்ளிட்ட சில கட்டுப்பாட்டு தகுதிகளையும் நிர்ணயித்துள்ளனர். தகுதியானவர்கள் பெற்றோரின் ஆதார் அட்டை, வருமான வரி சான்று, குழந்தையின் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், மொபைல் நம்பர், வங்கி கணக்கு உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு http://blakshmi.kar.nic.in:8080/First.jsp என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here