புதிதாக கிளம்பியுள்ள ஜிகா வைரஸ்.. அண்டை மாநிலத்தில் தொற்று உறுதி!!

0

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் 10 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள கேரளாவில் தற்போது இந்த புதிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே கொரோனா பரவலின் காரணமாக உலகம் முழுவதும் நிம்மதி இழந்து தவிக்கிறது. அதும் குறிப்பாக இரண்டாம் அலை ஏற்பட்ட பின் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை மற்றும் அவஸ்குலர் நெக்ரோசிஸ் எனும் எலும்பு மரண நோய் என்று புதிய புதிய நோய்கள் ஏற்பட்டு பீதியை கிளப்பின.

 

தற்போது புதிய தலைவலியாக, கேரளாவில் 10 பேருக்கு கொசுவின் மூலம் உண்டாகும் ஜிகா வைரஸ் பரவி வருகிறது. திருவனந்தபுரத்தில் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு, பரிசோதனையில் ஜிகா வைரஸ் உறுதிபடுத்தப்பட்டது. பின்னர் 10 பேருக்கு கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பு கொசுக்கடி மூலம் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை இந்நோய் பாதித்தவர்களுக்கு உண்டாகும் என கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here