Saturday, April 20, 2024

பேய் படகு !! எலும்புக்கூடுகளுடன் வடகொரியா படகுகள் — ஜப்பான் குற்றச்சாட்டு

Must Read

எலும்புக்கூடுகள் கொண்ட வடகொரியா படகுகள் ஜப்பானின் கடற்கரையில் ஒதுங்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

600 படகுகள்

நூற்றுக்கணக்கான வடகொரிய படகுகள் மனித எலும்புக்கூடுகளுடன் தங்கள் எல்லைக்குள் அனுப்பியதாக  சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது ஜப்பான்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 600 ஆதரவற்ற படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, கடந்த ஆண்டில் மட்டும் 150 படகுகள் ஜப்பான் கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளன.

50 வடகொரியர்களின் சடலங்கள்

கடந்த 2019 டிசம்பரில் ஜப்பானின் சாடோ தீவுக்கு அருகே மரத்தினாலான படகு ஒன்று கரை ஒதுங்கியது.அதில் துண்டிக்கப்பட்ட நிலையில் இருவரின் தலைகளும் எலும்புக்கூடாக உருமாறி வரும் ஐவரின் சடலங்களும் ஜப்பான் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.இதுபோன்ற சம்பவங்களால் தற்போது  தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றன. விமல், சூரிக்கு மீன் பிடிக்க உதவிய வன அதிகாரிகள் சஸ்பெண்ட் – வனத்துறை அதிரடி..!!

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 50 வடகொரியர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக ஜப்பானின் கடலோர பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

மேலும் கடலின் சீற்றம் தாங்க முடியாமலும், பாதுகாப்பற்ற படகுகளில் அதிக தொலைவு கடலுக்குச் செல்வதன் மூலமும், பல வடகொரிய மீனவர்கள் கரை திரும்பாமல் போனதாக கூறப்படுகிறது. உணவு தட்டுப்பாட்டை சமாளிக்க  கட்டாயப்படுத்தி வடகொரியா மீனவர்களை கடலுக்குள் அனுப்புவதாக கூறப்படுகிறது.

சட்டவிரோதமான செயலால் சீனவிற்கு ‘லாபம்’

சீனாவின் ஆதரவுடன் வடகொரிய கடற்பகுதிகளில் மீன் பிடிக்க களமிறங்கும் தொழில்முறை படகுகள் ஒருபோதும் கடலில் தங்கள் இருப்பிடத்தை பகிரங்கப்படுத்துவதில்லை எனவும், சீன வம்சாவளியைச் சேர்ந்த 900 க்கும் மேற்பட்ட கப்பல்கள் 2017 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக மீன் பிடித்தன, 2018 இல் 700 மீன் பிடித்து உள்ளன எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து 160,000 மெட்ரிக் டன்னை விட அதிகமாக மீன் பிடிபட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது இவை 346 மில்லியன் டாலர் மதிப்புடையவையாகும்.

இயற்கை சீற்றங்களால்

வட கொரிய படகுகள் 2018 ஆம் ஆண்டில் ரஷ்ய நீரில் சட்டவிரோதமாக மீன் பிடிக்க கட்டாயப்படுத்தியதாக அறிக்கை கூறுகிறது. சிலர் எரிபொருள் அல்லது  இயந்திர சிக்கல்கள், கடுமையான நீரோட்டங்கள் மற்றும் வலுவாக நிலவும் காற்றுகளால் ஜப்பானின் கடற்கரைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -