தன்னந்தனியே பேய் படம் பார்பவருக்கு ரூ 95,700 பரிசு – அமெரிக்க நிறுவனத்தின் வினோத அறிவிப்பு!!

0
தன்னந்தனியே பேய் படம் பார்பவருக்கு ரூ 95,700 பரிசு - அமெரிக்க நிறுவனத்தின் வினோத அறிவிப்பு!!
தன்னந்தனியே பேய் படம் பார்பவருக்கு ரூ 95,700 பரிசு - அமெரிக்க நிறுவனத்தின் வினோத அறிவிப்பு!!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், தனியாக அமர்ந்து 13 பேய் படங்களை பார்ப்பதற்கு ரூ 95,700 பரிசுத்தொகை தருவதாக அறிவித்துள்ளது.

தில்லுக்கு துட்டு:

அமெரிக்காவில் பைனான்ஸ் பஸ் என்ற மிகப்பெரிய நிறுவனம் வினோதமான ஒரு போட்டியை அறிவித்துள்ளது. இந்த போட்டிக்கு இந்நிறுவனம், ஹாரர் மூவி ஹார்ட் ரேட் அனலிஸ்ட் என்று பெயர் வைத்துள்ளது. அதன்படி இதுவரை உருவாக்கப்பட்ட மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் படு பயங்கர பேய்ப் படங்கள் 13 தேர்வு செய்யப்படும் எனவும், போட்டியாளர் தனியாக ஓர் அறையில் அமர்ந்து இந்தப் படங்களைத் தொடர்ச்சியாக 10 மணி நேரத்துக்குள் பார்த்து முடிக்க வேண்டும் எனவும் போட்டிக்கான வரைமுறைகளை அறிவித்துள்ளனர்.

தன்னந்தனியே பேய் படம் பார்பவருக்கு ரூ 95,700 பரிசு - அமெரிக்க நிறுவனத்தின் வினோத அறிவிப்பு!!
தன்னந்தனியே பேய் படம் பார்பவருக்கு ரூ 95,700 பரிசு – அமெரிக்க நிறுவனத்தின் வினோத அறிவிப்பு!!

இந்த போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ரூபாய் 95,700 பரிசுத் தொகையாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போட்டியில் அறிவிக்கப்பட்டுள்ள படங்களின் பட்டியலில் சா, அமிட்டிவில்லே ஹாரர், ஏ கொயட் ப்ளேஸ் உள்ளிட்ட 13 படங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த போட்டியில் அமெரிக்காவைச் சார்ந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் எனவும் அறிவித்துள்ளது. இந்த போட்டிக்கான காரணத்தை தற்போது இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தன்னந்தனியே பேய் படம் பார்பவருக்கு ரூ 95,700 பரிசு - அமெரிக்க நிறுவனத்தின் வினோத அறிவிப்பு!!
தன்னந்தனியே பேய் படம் பார்பவருக்கு ரூ 95,700 பரிசு – அமெரிக்க நிறுவனத்தின் வினோத அறிவிப்பு!!

இந்த போட்டிக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளதாவது, பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் பேய்ப் படங்கள், மற்றும் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்படும் பேய்ப் படங்கள் என்ற பட்டியலில் எந்த மாதிரியான படங்கள் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்ய விரும்புவதாகவும், இதற்காகத் தான் பேய்ப் படம் பார்க்க எங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்பவர்களுக்கு ஒரு இயந்திரம் பொருத்தி அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றத்தை பொறுத்து படத்தின் தாக்கத்தைக் கண்டறிய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here