தமிழக வாகன ஓட்டிகளே., ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கான புதிய நடைமுறை., இன்று (பிப்.28) முதல் அமல்!!!

0
தமிழக வாகன ஓட்டிகளே., ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கான புதிய நடைமுறை., இன்று (பிப்.28) முதல் அமல்!!!

தமிழகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு அரசு ஆவணங்களுக்கான நடைமுறைகள் ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஓட்டுநர் உரிமங்களை பெறுவதற்காக, வாகன ஓட்டிகள் RTO அலுவலகத்திற்கு அலையாமல் இருக்க, புதிய வசதியை ஏற்படுத்தி உள்ளனர். அதன்படி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம், ஆன்லைன் மூலம் வினியோகிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்.., அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு வெளியீடு!!!

அதன் பின்னர் எல்.எல்.ஆர்.-ல் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்திற்குள், வாகன ஆய்வாளரின் முன்பு ஓட்டிக் காட்ட வேண்டும். தேர்ச்சி பெற்ற பின் ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்தை வாங்க அலைய தேவையில்லை. தபால் மூலம் வீட்டிற்கே அனுப்பும் வசதி இன்று (பிப்.28) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான உரிம கட்டணம் ரூ.520, தபால் செலவு ரூ.50 என செலுத்த வேண்டும். விண்ணப்பதாரரின் முகவரி தவறாக இருக்கும் பட்சத்தில், மீண்டும் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சென்று, சரியான விலாசத்தை கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here