தனது கணவரை அடித்து நொறுக்கும் ஜெனிலியா – உங்களுக்கு இவளோ கோவம் வருமா?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
gene

பாலிவுட் விருது வழங்கும் விழா ஒன்றில் நடிகை ஜெனிலியா மற்றும் அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சக நடிகை ஒருவருக்கு முத்தம் கொடுத்த கணவனை நடிகை ஜெனிலியா அடித்தவாறு உள்ள கியூட்டான வீடியோ ஒன்று வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஜெனிலியா

பாலிவுட் நடிகையான ஜெனிலியா இயக்குனர் சங்கரின் ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். கியூட்டான சுட்டி பெண்ணாக வலம் வந்த ஜெனிலியாவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் ‘சச்சின்’, நடிகர் ஜெயம்ரவியுடன் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குறிப்பாக சில தமிழ் திரைப்படங்களில் ஜெனிலியா ஏற்று நடித்த ஹரிணி, ஹாசினி, ஷாலினி ஆகிய கதாப்பாத்திரங்கள் இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து வந்த ஜெனிலியா கடந்த 2012ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.

படப்பிடிப்பை மோதலில் ஆரம்பித்த விக்ரம், துருவ் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பாலிவுட்டில் சிறந்த ஜோடியாக வலம் வந்த ரித்தேஷ் – ஜெனிலியா தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னதாக பாலிவுட் திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட ரித்தேஷ், நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் கைகளை பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். அப்போது அருகில் இருந்த ஜெனிலியாவின் முகம் மாறுவதை வீடியோவாக படம் பிடித்துள்ளனர்.

இந்த வீடியோக்கள் அப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த வீடியோக்கள் மீண்டுமாக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோக்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜெனிலியா வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், வீட்டுக்கு வந்தவுடன் என்ன நடந்தது என்று தெரியனுமா என்ற கேப்ஷனுடன், பழைய வீடியோவை பதிவிட்டு, பின்பு ரித்தேஷை குத்துவது போலவும், அதற்கு ரித்தேஷ் பயந்து போய் கீழே விழுவது போலவும் அந்த வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here