“அண்ணாமலை கீழ் எந்த பெண்ணும் பாதுகாப்பாக இருக்க முடியாது” .., காயத்ரி ரகுராம் குற்றசாட்டு!!

0
"அண்ணாமலை கீழ் எந்த பெண்ணும் பாதுகாப்பாக இருக்க முடியாது" .., காயத்ரி ரகுராம் குற்றசாட்டு!!

விசில்,சார்லி சாப்ளின் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் காயத்ரி ரகுராம். இவர் பல படங்களில் டான்ஸ் மாஸ்டராகவும் பணிபுரிந்துள்ளார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இந்நிலையில் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டில் பாஜக கட்சியில் இணைந்து அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக பணியாற்றினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் அண்மையில் பாஜக கட்சியை அவமதிக்கும் செயல்களை காயத்ரி தொடர்ந்து செய்து வருகிறார். எனவே அவரை கட்சியின் பதவியிலிருந்து 6 மாதத்திற்கு நீக்குகிறேன் என பாஜக தமிழகத்தலைவர் கே.அண்ணாமலை அறிவித்தார். ஆனால் காயத்ரி இதற்கு மறுப்பு தெரிவித்து மீண்டும் கட்சியில் சேர்ந்து பணியாற்றுவேன் என கூறினார்.

பழம்பெரும் பாடகி திடீர் மறைவு., வீட்டிலேயே உயிர் பிரிந்த சோகம்! முதல்வர் ஆழ்ந்த இரங்கல்!!

இப்படி இருக்கையில் இப்போது காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் நான் விலகுவதற்கு காரணம் தமிழகத் தலைவர் அண்ணாமலை தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இதை தொடர்ந்து அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும் நான் கட்சியில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here