மீண்டும் கட்சி தாவும் காயத்ரி ரகுராம்.., யாருடன் இணைகிறார் தெரியுமா?? அவரே வெளியிட்ட பதிவு!!!

0
மீண்டும் கட்சி தாவும் காயத்ரி ரகுராம்.., யாருடன் இணைகிறார் தெரியுமா?? அவரே வெளியிட்ட பதிவு!!!
பிரபல நடன இயக்குனரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தார். ஆனால் அப்போது பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கட்சியை விட்டு விலகுவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதன் பிறகு இவர் திமுகவில் சேருவார் என எதிர்பார்த்த நிலையில் அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவுடன் இணைந்து மக்களுக்கான பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் தன்னுடைய கட்சி பெயரை அறிவித்தார்.
அதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியில் யார் எல்லாம் இணைய போகிறீர்கள் என சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியானது .இந்நிலையில் காயத்ரி ரகுராம் விஜய் கட்சியில் இணைவதாக காட்டுத்தீ போல் தகவல்கள் பரவி வந்தது. தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை காயத்ரி ரகுராம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது நான் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் பணியாற்றக்கூடிய ஒரே இடம் அதிமுக தான். நான் அதிமுகவுடன் இணைந்து தான் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். நான் எந்த கட்சியிலும் இணையவில்லை என பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here