அஜித்துக்கு வில்லனாக களமிறங்கும் பிரபல இயக்குனர்.., இணையத்தில் கசிந்த தகவல்!!

0
அஜித்துக்கு வில்லனாக களமிறங்கும் பிரபல இயக்குனர்.., இணையத்தில் கசிந்த தகவல்!!
AK-வின் துணிவு பட ரிலீஸ் தேதியில் மாற்றம் - இப்போதைக்கு இதுதான் முடிவு? கால்லை வாரிய படக்குழு!!

AK 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க, இயக்குனர் கவுதம் மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வைரலாகி வரும் நிலையில், இந்த தகவல் குறித்து அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.

வைரலாகும் நியூஸ்:

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘துணிவு’ திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். துணிவு படத்தை தொடர்ந்து அஜித், விக்னேஷ் சிவன் இயக்க உள்ள AK 62 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில், ஷூட்டிங் வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் இப்படத்தில் அஜித்துடன் நடிக்க உள்ள சக நடிகர்கள் பெயர்கள் இணையத்தில் வந்த வண்ணம் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் “AK 62” படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க இயக்குனர் கவுதம் மேனனிடம் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இருப்பினும் இது குறித்து கன்பர்மேஷன் எதுவும் வரவில்லை. இந்நிலையில் கவுதம் மேனன் இந்த வைரல் தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தளபதி விஜய் பெண்ணாக இருந்தால் நான் “லவ்” பண்ணியிருப்பேன்..,, காமெடி நடிகரின் பரபரப்பு பேட்டி!!

அதாவது, ‘விக்னேஷ் சிவன் என்னுடைய நெருங்கிய தோழர், ஆனால் AK 62 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளது குறித்து இதுவரை என்னிடம் அவர் எதுவும் சொல்லவில்லை. இனி கேட்டால், அந்த கேரக்டருக்கு நான் செட் ஆவேனா என்பதை தெரிந்துகொண்டு கண்டிப்பாக நடிக்க சம்மதிப்பேன்” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here