சமையல் சிலிண்டர் வாங்குவதில் எழுந்த புதிய சிக்கல் – புது மாற்றத்தை அறிவித்த மத்திய அரசு!!

0
சமையல் சிலிண்டர் வாங்குவதில் எழுந்த புதிய சிக்கல் - புது மாற்றத்தை அறிவித்த மத்திய அரசு!!

நாட்டில் உஜ்வாலா திட்டத்தின் வாயிலாக சமையல் சிலிண்டருக்கு மானியம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, முக்கியமான செய்தி ஒன்றை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 அரசு அறிவிப்பு :

மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து, கேஸ் உள்ளிட்ட எரிபொருட்களை பெற்று, மாநில அரசு வாயிலாக மக்களுக்கு விநியோகம் செய்கிறது. மேலும், சமையல் சிலிண்டருக்கு மானியம் கொடுத்து பயனர்களின் பண சுமையை குறைத்து வருகிறது. இந்த நிலையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயு மானியம் பெறும் பயனர்களுக்கு பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது, சிலிண்டர் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் முன் பணம் செலுத்த வேண்டும்.

தற்போது மத்திய கொண்டு வரவுள்ள புதிய மாற்றத்திற்கு பின், முன் பணம் செலுத்தும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, பயனர்களிடம் 1600 வசூலிக்கப்படும் என சொல்லப்படுகிறது. தற்போது எண்ணெய் விநியோக நிறுவனங்கள் EMI வாயிலாக பணத்தை வசூலித்து வரும் நிலையில், இனி மொத்த பணத்தையும் நேரடியாக பொதுமக்களே செலுத்த வேண்டியிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது, இந்த புது மாற்றம் நடைமுறைக்கு வந்த பின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு கிடைத்து வரும் மானிய முறையில் பெரிய மாற்றங்கள் நிகழலாம் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here