சமையல் சிலிண்டருக்கான மானியம் நிறுத்தம்? மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! பொதுமக்கள் ஷாக்!!

0
சமையல் சிலிண்டருக்கான மானியம் நிறுத்தம்? மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! பொதுமக்கள் ஷாக்!!

சமையல் சிலிண்டருக்காக மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஆதார் எண்ணை மானியத்திற்கான வங்கி கணக்குடன் இணைக்காதவர்களின் மானிய தொகை அதிரடியாக நிறுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு:

நாட்டில் பொது மக்களுக்கு மத்திய அரசு சமையல் சிலிண்டரை விநியோகம் செய்து வருகிறது. இதில் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்க, மத்திய அரசால் குறிப்பிட்ட தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த கொரோனா காலத்தில் இந்த சிலிண்டருக்கான மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த மானியம் முறையாக வழங்கப்படுவதில்லை என குற்றம் எழுந்தது.

மேலும், உஜ்வாலா திட்டத்தின் பயனர்களுக்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்படும் என பேச்சு எழுந்தது. இதுபோக, வருடத்தில் 12 சிலிண்டருக்கு மட்டுமே, 200 ரூபாய் மானியமாக கிடைக்கும் என்று தகவல் வெளியானது. ஆனால், அதற்கான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், மானியத்திற்கான கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும், அவ்வாறு இணைக்காதவர்களுக்கு மானியம் நிறுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

அதற்கான முறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, பயனர்கள் தங்கள் சிலிண்டர் நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று, அங்குள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விநியோகிஸ்தர்களிடம் கொடுக்க வேண்டும். இதுபோக, மொபைலில் இதை செய்ய விரும்புபவர்கள் 18000-2333-555 என்ற எண்ணிற்கு கால் செய்து, கேட்கப்படும் தகவலை நிரப்பி, இதனை செய்து கொள்ளலாம்.

இந்த இணைப்பு முடிந்தவுடன், பயனர்களின் மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். இதை செய்யாதவர்களுக்கு கண்டிப்பாக மானியத் தொகை நிறுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here