“உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு போணுமான விராட் நீங்க இத செஞ்சே ஆகணும்”…, கங்குலி பளிச் பேட்டி!!

0
"உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு போணுமான விராட் நீங்க இத செஞ்சே ஆகணும்"..., கங்குலி பளிச் பேட்டி!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக விராட் கோலிக்கு கங்குலி முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

விராட் கோலி:

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடுவதற்காக தயாராகி வருகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 1ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், 9ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்திய அணி விளையாட இருக்கிறது. 4 டெஸ்ட் தொடர்களை கொண்ட இந்த டிராபியானது, வரும் 9ம் தேதி முதல் மார்ச் மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஏற்கனவே அதிக புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி ஏறக்குறைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 4 டெஸ்டில் இந்திய அணி குறைந்தது 3 போட்டிகளில் ஆவது வெற்றி பெற்றால் மட்டுமே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேற முடியும். இதனால், இந்த டெஸ்ட் டிராபி இந்திய அணிக்கு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதற்காக, இந்தியாவின் ரோஹித், விராட் கோலி உள்ளிட்ட சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

கோலாகலமாக நடைபெற்ற கிரிக்கெட் வீரர் அக்சர் படேல்-மேகா திருமணம்…, வைரலாகும் வீடியோ!!

இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் வீரரான சவுரவ் கங்குலி, விராட் கோலி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்த வருடத்தின் முதல் போட்டியிலேயே, சதம் அடித்து விராட் கோலி அசத்தி உள்ளார். பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தனது சிறந்த ஆட்டத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று கங்குலி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here