நடிகை கங்கனாவின் கன்னத்தை தனது தொகுதி சாலையுடன் ஒப்பிட்டு பேச்சு – காங்கிரஸ் எம்எல்ஏ பேட்டியால் வெடித்தது சர்ச்சை!!

0

ஜார்கண்ட் மாநிலத்தின், ஜம்தாரா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவான டாக்டர். இர்பான் அன்சாரி, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கன்னங்கள் குறித்து பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைப் பேச்சு:

ஜார்கண்ட் மாநிலத்தில், முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி தலைமையிலான ஹேமந்த் சோரன் என்பவரின்  ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின், ஜம்தாரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான டாக்டர். இர்பான் அன்சாரி, தனது தொகுதியில் சாலையை பற்றிய பேட்டியில், தெரிவித்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அவர் தனது தொகுதியில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கன்னங்களை விட, மென்மையான சாலையை அமைப்பேன் என்று பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இவர் இதற்கு முன், அதிக நேரம் முகக்கவசம் போடுவதால், சுவாசிக்கும் போது நாம் வெளியிடக்கூடிய உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை சுவாசிக்க நேரிடும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்து பிரச்சனையில் சிக்கியுள்ளார். தற்போது அந்த எம்எல்ஏ, நடிகை கங்கனா ரனாவத் குறித்து பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் அதிக நபர்களால் பகிரப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here