450 கிலோ காகிதத்தால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலை.., இளைஞர்கள் அசத்தல்!!!

0
450 கிலோ காகிதத்தால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலை.., இளைஞர்கள் அசத்தல்!!!
450 கிலோ காகிதத்தால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலை.., இளைஞர்கள் அசத்தல்!!!

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க படுவது வழக்கம். இதற்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவிக்கும். அந்த வகையில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விநாயகர் சிலை தயாரித்து கொண்டாட அறிவுறுத்தியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து திலாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கதிர்காமம் இந்திராகாந்தி மேல்நிலைப் பள்ளி நுண்கலை ஆசிரியர் உதவியுடன் 450 கிலோ காகிதங்களை கொண்டு 15 அடி உயரத்தில் விநாயகர் சிலையை பிரமாண்டமாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் காகிதத்தால் சிலை செய்வது சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் வெளுக்கப் போகும் கனமழை.., எங்கெல்லாம் தெரியுமா?? வானிலை மையம் எச்சரிக்கை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here