விநாயகர் சதுர்த்தி பண்டிகை கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!!

0
விநாயகர் சதுர்த்தி பண்டிகை கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!!
விநாயகர் சதுர்த்தி பண்டிகை கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!!

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ரத்து செய்யக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

மனு தள்ளுபடி:

கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட கூடுதல் தளர்வுகளில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி பொது இடத்தில், விநாயகர் சிலை வைத்து கொண்டாட தடை விதிப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, முக்கிய கட்சிகள் இந்த அறிவிப்பை திரும்ப பெறக்கோரி வைத்த கோரிக்கைகளை தமிழக அரசு திட்டவட்டமாக ஏற்க மறுத்து விட்டது. இந்த நிலையில் இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை மதுரை கிளை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!!
விநாயகர் சதுர்த்தி பண்டிகை கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!!

இது குறித்த மனுவில் இந்து முன்னணி செயலாளர் குற்றாலநாதன் தெரிவித்ததாவது, திரையரங்குகள் மற்றும் சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதித்திருப்பது ஏற்க கூடியதாக இல்லை என தெரிவித்தார். மேலும், கொரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செப்.10ம் தேதி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், இந்தச் சிலைகளை 12ம் தேதி நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!!
விநாயகர் சதுர்த்தி பண்டிகை கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!!

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசுவாமி, முரளி சங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்குமாறு அனுமதி கேட்கப்பட்டது. இதையடுத்து, இதற்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள் அமர்வு இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here