ஜல்லிக்கட்டில் தொடரும் சோகம்., ஒருவர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்.., மக்கள் அதிர்ச்சி!!

0
ஜல்லிக்கட்டில் தொடரும் சோகம்., ஒருவர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்.., மக்கள் அதிர்ச்சி!!
ஜல்லிக்கட்டில் தொடரும் சோகம்., ஒருவர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்.., மக்கள் அதிர்ச்சி!!

தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 15ம் தேதி முதல் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் சிறப்பான முறைகளில் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழர்களின் கலாச்சார போட்டியான உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு மதுரை, திருச்சி, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து ஜனவரி 15ம் தேதி பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய இளைஞரை (அரவிந்த்ராஜ்) காளை முட்டி தூக்கியதில் உயிரிழந்தார். பின்னர் நேற்று திருச்சி சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த அரவிந்த் என்பவர் காளை முட்டியதில் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த இருவர் குடும்பத்தினருக்கும் தலா 3 லட்சம் நிதியுதவி தமிழக அரசு வழங்கியது.

தேசிய விருது இயக்குனருடன் கூட்டணி வைக்கும் சூர்யா.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

இதைத்தொடர்ந்து இன்று (ஜனவரி 17) புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடந்த விறுவிறுப்பான மஞ்சுவிரட்டை காணவந்த சிவகங்கை மாவட்டம் புதுவயலை சேர்ந்த கணேசன் (52) என்பவரை எதிர்பாராத விதமாக காளை முட்டியது. மேலும் 20 க்கும் மேற்பட்டோர்கள் காயம் அடைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த கணேசன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இப்படியாக தொடர்ந்து மூன்று நபர்கள் வீர விளையாட்டில் உயிரிழந்த செய்தி தமிழகத்தை சோகத்திற்குள் ஆக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here