இரட்டை சதத்திற்கு பிறகு பார்மின்றி தவிக்கும் இஷான் கிஷன்…, அறிவுரை வழங்கிய கம்பீர்!!

0
இரட்டை சதத்திற்கு பிறகு பார்மின்றி தவிக்கும் இஷான் கிஷன்..., அறிவுரை வழங்கிய கம்பீர்!!
இரட்டை சதத்திற்கு பிறகு பார்மின்றி தவிக்கும் இஷான் கிஷன்..., அறிவுரை வழங்கிய கம்பீர்!!

இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷன் இரட்டை சதத்திற்கு பிறகு, பார்மின்றி தடுமாறி வரும் நிலையில், கவுதம் கம்பீர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இஷான் கிஷன்:

இந்திய அணியானது இந்த வருடத்தில், நியூசிலாந்து அணிக்கு எதிராக 2 டி20 போட்டிகளை விளையாட உள்ளது. இந்த போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று (1-1) சமநிலையில் உள்ளன. இதையடுத்து, தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3 வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாத்தில் நாளை மறுநாள் (பிப். 1) நடைபெற இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கடந்த 2 போட்டிகளிலும் இந்தியாவின் தொடக்க வீரர்கள் சொதப்பியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், குறிப்பாக பங்களாதேஷிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்த பிறகு, விளையாடிய போட்டிகளில் எல்லாம் சொற்ப ரன்களில் வெளியேறி வருகிறார். இவரது பார்ம் குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

சர்வதேச அளவில் அனைத்து வகையிலும் தனது ஓய்வை அறிவித்த தமிழக வீரர்!!

அவர் கூறியதாவது, நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் 4,19 ரன்களில் வெளியேறிய இஷான் கிஷன், சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்க்கொள்ள தடுமாறி வருகிறார். வேகப்பந்து வீச்சை நம்பிக்கையுடன் எதிர்கொள்வது போல, சுழற்பந்து வீச்சையும் தடுமாற்றமின்றி எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். டி20யை பொறுத்த வரையில் சுழற்பந்தை எதிர்கொள்வது பற்றியும் இஷான் கிஷன் கற்று கொள்ள வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here