கலர்கலர் உடையில் கலக்கலாக போஸ் கொடுத்த கேபி – வைரலாகும் புகைப்படங்கள்!!

0

“பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான், கேபி. இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் அழகில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“பிக் பாஸ்” பிரபலம் கேபி

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான், கேபி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “3” திரைப்படத்தில் இவர் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்தார். அந்த திரைப்படத்தில் இவருக்கு சிறு வேடம் தான் என்றாலும், பலரது கவனத்தினையும் ஈர்த்தார். இப்படியாக இருக்க, இவர் அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

டேஸ்டியான ஈவினிங் ஸ்னாக்ஸ் “பன்னீர் பாப்கார்ன்” – குழந்தைகள் விரும்பும் ரெசிபி!!

இவர் சமுத்திரக்கனியின் “அப்பா” திரைப்படத்தில் தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படியாக இருக்க, இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் கேபி மிகவும் நன்றாகவே அனைவரிடமும் நடந்து கொண்டார் என்று தான் கூற வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், அனைவரும் ரசிக்கும்படியும் இருந்தார். பின், அந்த நிகழ்ச்சியில் 5 லட்சம் பணத்துடன் அந்த வீட்டை விட்டு சென்று விட்டார். தற்போது கேபி ஒரு சில டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அல்ட்ரா மாடர்ன் புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here