அமலாகிறது தளர்வுகளற்ற பொதுமுடக்கம் – ஓமைக்ரான் எதிரொலியால் மாநகராட்சி அதிரடி!!

0

மும்பையில் இதுவரை 13 நபர்கள் ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால்,வருகிற டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மும்பை நகர காவல் துறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மீண்டும் பொது முடக்கம்:

கொரோனாவின் உருமாறிய வைரஸ் ஆன ஓமைக்ரான்,உலகம் முழுவதும் அதி தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. குறிப்பாகச் சொல்லப்போனால் மும்பையில் இதுவரை 13 நபர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க,டிசம்பர் 31-ஆம் தேதி வரை மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாநகராட்சியின் காவல்துறை ஆணையர் அலுவலகம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஓமைக்ரான்,பரவல் அச்சம் காரணமாக மும்பையில் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு,வெளிநாடுகளிலிருந்து மும்பை வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள ஹோட்டல்களில் 50% நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கும் ஓமைக்ரான் தொற்றால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here