150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு – மத்திய சுகாதாரத்துறை அதிரடி!!

0
lock down

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று அனைத்து மாநிலங்களிலும் மிக கடுமையாக காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டில் சுமார் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமைப்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு:

நாட்டில் தினமும் 3 லட்சத்திற்கு அதிகமானவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டும், ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றினால் உயிரிழந்தும் வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது நாட்டில் மிக அதிகமாக மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து உபி, கர்நாடக, கேரளா, ராஜஸ்தான், குஜராத், சத்திஸ்கர் மற்றும் தமிழகம் உட்பட்ட மாநிலங்களில் மிக அதிகமான அளவில் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்த அனைத்து மாநிலங்களிலும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மாநிலங்களில் மட்டும் தேசிய அளவில் சுமார் 69 சதவிகித பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏப்ரல் 29 முதல் மே 3ம் தேதி வரை பொதுமுடக்கம் – மாநில முதல்வர் அதிரடி நடவடிக்கை!!

தற்போது நாட்டில் 15% அதிகமான தொற்றின் பாதிப்பு கண்டறியப்படும் மாவட்டங்களில் முழு ஊரடங்கு விதிக்கும்படி மத்திய சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. இந்த முடிவை உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. மேலும் இதில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் இதுகுறித்த இறுதி முடிவு மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பின்பு தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here