கொரோனா தடுப்பு பணியில் உரியிழந்த முன்களப்பணியாளா் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி !!!

0

கொரோனா தடுப்பில் ஈடுபட்டு உயிரிழக்கும் முன்களப்பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி தரலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் யோசனை கூறியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னை உயர்நீதி மன்றத்தில் மதுரையைச் சோ்ந்த ஜலாலுதீன் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது,”  தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலைப் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது வரை 89 மருத்துவா்கள் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். மதுரை அனுப்பானடியைச் சோ்ந்த மருத்துவா் சண்முகப்பிரியா 8 மாத கா்ப்பிணியாக இருந்த நிலையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா்.

மேலும் தமிழக அரசு, இக்கொடிய தொற்றுநோய்க்கு பலியாகும் முன்களப்பணியாளருக்கு இந்நாள் வரை   வழங்கப்படும் நிவாரணம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, முன்களப்பணியாளா்களான மருத்துவா் உயிரிழந்தால் ரூ.50 லட்சம், செவிலியா் மற்றும் காவல் துறையினா் உயிரிழந்தால் ரூ.25 லட்சம், தூய்மைப் பணியாளா் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்” இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முன்களப் பணியாளா்களுக்கு தமிழக அரசு தேவையான நிவாரணங்களை வழங்கி வருகிறது. இதில் நீதிமன்றம் புதிதாக உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை. அதே சமயம் உயிரிழந்த முன்களப்பணியாளா்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here