பள்ளி, கல்லூரிகள் மார்ச் 8இல் திறப்பு – பிரதமர் அறிவிப்பு!!

0

கொரோனா ஊரடங்கிற்குப்பின் மீண்டுமாக இங்கிலாந்தில் மார்ச் 8ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

மீண்டுமாக பள்ளிகள் இயக்கம்

உலகம் முழுவதும் பரவிய கொரோனா நோய் தொற்றினால் உலக நாடுகள் பலவும் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளது. கொரோனா தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனுடன் புதிய உருமாறிய கொரோனா பரவலும் இங்கிலாந்து நாட்டை ஆட்டிப்படைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் கொரோனா தொற்றின் வேகம் ஒவ்வொரு நாடுகளிலும் படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளுடன் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தொடர்ந்து இங்கிலாந்தில் பொது முடக்க தளர்வுகளை அறிவித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன். தளர்வுகளின் முதல்படியாக மார்ச் 8ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என அறிவித்துள்ளார் இங்கிலாந்து பிரதமர்.

டூல்கிட் வழக்கு – திஷா ரவிக்கு ஜாமின் வழங்கிய டெல்லி நீதிமன்றம்!!

மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து பாடசாலைக்கு செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மார்ச் 26ம் தேதி முதல் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படும் எனவும், பொது இடங்களில் இரண்டு பேர் கூடலாம் எனவும் அறிவித்துள்ளார். பிரிட்டனில் பள்ளிகளை திறப்பது குறித்து இங்கிலாந்து பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வரும் 29ம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்னும் அநேக அறிவிப்புகளை வெளியிட போவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here