
அரசு மருத்துவமனைகளில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முறைகளை மத்திய மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் தலைசிறந்த தூய்மை மருத்துவமனையான புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன் காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து அனுதினமும் எண்ணற்றவர்கள் சிகிச்சை மேற்கொள்ள வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு உயர் சிகிச்சை உட்பட அனைத்தும் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்படும்.
நான் அதற்காக அவ்வளவு கஷ்டப்பட்டேன் – நடிகர் சாந்தனு எமோஷனல் ஸ்பீச்!!
மற்றவர்களுக்கு ஒரு சில உயர் சிகிச்சைக்கு மட்டும் மிக குறைந்த கட்டணம் வசூல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் ஏழை எளிய மக்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து யாரும் அரசியல் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளார்.