நவம்பர் வரை ரேஷனில் இலவச அரிசி – உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு!!

0
தமிழக குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ரேஷனில் கூடுதல் பொருட்கள் வழங்க முடிவு! உணவுத்துறை அதிரடி!!
தமிழக குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ரேஷனில் கூடுதல் பொருட்கள் வழங்க முடிவு! உணவுத்துறை அதிரடி!!

தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்து உள்ளார். மேலும் ஜூலை 1 முதல் 3ம் தேதி வரை பணம் கொடுத்து ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கிய மக்களுக்கு, ஆகஸ்ட் மாதம் இலவசமாக பொருட்கள் வழங்கி ஈடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலவச ரேஷன் பொருட்கள்:

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்ததை தொடர்ந்து ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட காரணத்தால், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் கூடுதல் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை மாதமும் இது இலவசமாக வழங்கப்படும் என ஏற்கனவே முதல்வர் அறிவித்து இருந்தார்.

Ration Card
Ration Card

1.7.2020 முதல் 3.7.2020 வரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களான துவரம்பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை நியாய விலைக் கடைகளில் அதற்கான விலை கொடுத்து பெற்றுள்ளனர். அவர்களுக்கு அந்த தொகையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் மாதம் இலவசமாக பொருட்கள் வழங்கப்படும். இதற்காக முன்பதிவு செய்யப்பட்டு செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். ஏற்கனவே வழங்கப்பட்ட அளவின்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நவம்பர் வரை இலவச அரிசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here