தமிழக பெண்களுக்கு மீண்டும் ஒரு சூப்பர் ஆஃபர் – அரசு எடுத்த அதிரடி முடிவு!

0

கடந்த 2021ம் ஆண்டு தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முதல் திட்டமான மாநகர மற்றும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதனால் தமிழகத்தில் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்த திட்டம் சாதாரண பேருந்துகள் மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு புதிதாக ஒரு வசதியினை அமல்படுத்தியுள்ளது. இலவச பேருந்துகளை பிங்க் நிறத்தில் மாற்றி இன்று உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் ஒரு சேவையை தொடங்கி வைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தமிழகத்தில் உள்ள சென்னையில் மெட்ரோ ரயில் அதிகமாக இயங்கி வருகின்றன. அதில் வேலைக்கு செல்பவர், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதற்கு இந்த மெட்ரோ ரயிலை பயன்படுத்துகின்றனர்.

இதனை தொடர்ந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு 10 இணைப்பு சிற்றுந்து சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த சேவை பேருந்து நிலையங்களில் இருந்து முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செனாய் நகர், மெட்ரோ- தியாகராய நகர், சின்னமலை மெட்ரோ- தரமணி, விமான நிலைய மெட்ரோ- தாம்பரம் மேற்கு, கிண்டி மெட்ரோ- வேளச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு இந்த சிற்றுந்து சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here