தமிழக அரசின் கொரோனா நிவாரண பொருட்கள் – சூடுபிடிக்கும் பணிகள்!!

0
new rules and regulations issued by tn government
new rules and regulations issued by tn government

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா நிவாரணம்:

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் மக்களின் துயரத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என்றும் அதன் முதல் தவணையாக தற்போது ரூ.2000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது அதற்காக டோக்கன்கள் வழங்கும் பணிகள் மிக தீவிரமாக இருந்து வருகிறது. மேலும் மக்களுக்கு பயடையும் வகையில் அரிசி அட்டை தாரர்களுக்கு மளிகை பொருட்கள் கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார். கொரோனா நிவாரணமாக கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, உளுத்தம் பருப்பு, புளி, கடலை பருப்பு, டீ தூள், கடுகு, சீரகம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு நாளைக்கு 40,000 கொரோனா தடுப்பூசி வழங்க திட்டம் – மாநில அரசு அதிரடி!!

மஞ்சள் தூள், மிளகாய் தூள், குளியல் சோப், துணி சோப் மற்றும் இதனை வைக்க ஓர் துணிப்பை என மக்களின் அன்றாட வாழ்வுக்கு தேவைப்படும் 15 பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான பணிகள் மிக தீவிரமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இதனை வைப்பதற்கான துணிப்பை தயாராகி வருகிறது. அதில் ‘நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம், தொற்றில் இருந்து தமிழகத்தை மீட்போம்’ என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here