தமிழகத்தில் இலவச மின்சாரம் திட்டம் ரத்தாகுமா?? முதல்வர் பழனிசாமி பேட்டி!!

0
edapadi palanisamy
edapadi palanisamy

தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து எனும் செய்தி பரவி வருகிறது. கரூரில் முதல்வரிடம் இது பற்றி கேட்டபோது விவசாயிகளுக்கு பாதிப்பு தரக்கூடிய எந்த முயற்சியும் எடுக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளார்.

இலவச மின்சாரம்

தமிழகத்தில் முதன்முதலாக 1984ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் கொண்டு வரப்பட்டது. 1990ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சார திட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழக அரசு விவசாயிகளுக்காக அறிவித்த இந்த இலவச மின்சாரம் ரத்து செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி வரும் முதல்வர் நேற்று கரூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம் மற்றும் புதிய திட்டப்பணிகள் தொடக்கவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.

அந்த கூட்டத்தில் முதல்வரிடம் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து எனும் செய்தி பரவி வருகிறது என அது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,” இது எதிர்க்கட்சிகளின் செயல். மே மாதம் சட்டமன்ற தேர்தல் வருகிறது. அதனால் சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு விஷத்தனமான விஷயங்களை மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்கள்.

விஜய் பட நடிகருக்கு திடீர் ‘ஹார்ட் அட்டாக்’!!

ஜெயலலிதா அவர்களின் அரசை பொறுத்தவரை விவசாயிகளுக்கு பாதிப்பு தரக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் நங்கள் செய்ய மாட்டோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை இந்த அரசு தொடர்ந்து வழங்கும்” என உறுதியளிப்பதாக முதல்வர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here