இலவச கல்வி திட்டத்தில் இந்த மாணவர்களின் சேர்க்கை 25% மட்டும் தான்.., தனியார் பள்ளிகள் அதிரடி!!

0
இலவச கல்வி திட்டத்தில் இந்த மாணவர்களின் சேர்க்கை 25% மட்டும் தான்.., தனியார் பள்ளிகள் அதிரடி!!
இலவச கல்வி திட்டத்தில் இந்த மாணவர்களின் சேர்க்கை 25% மட்டும் தான்.., தனியார் பள்ளிகள் அதிரடி!!

தமிழகத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதியுடன் 2022-2023 ஆம் கல்வியாண்டு முடிவடைந்த நிலையில், கோடை விடுமுறையை மாணவர்கள் களித்து வருகின்றனர். இதற்கிடையில், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையும் கடந்த மாதம் ஏப்ரல் 19ம் தேதியே தொடங்கியது. இதனால், பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த வகையில், இலவச கல்வித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும், தனியார் பள்ளிகளில் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்காக 25% எல் கே ஜி மாணவர்கள் சேர்க்கையை அரசு ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு 12 வகுப்பு வரை உள்ள கட்டணத்தை அரசே ஏற்று வருகிறது. இதற்காக, ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 80 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் வழித்தடம் இந்த பகுதிகளில் இயங்காது?? ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!

இந்த திட்டத்தின் கீழ், எதிர்வரும் கல்வியாண்டுக்காக தற்போது வரை 1 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை விட அதிகமாக உள்ளதால், கல்வி அதிகாரிகள் முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். அதாவது, எந்த தனியார் பள்ளியில் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதோ, அந்த பள்ளிகளில் மட்டும் குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கை பெற்றோர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளனர். மேலும், இலவச கல்வித் திட்டத்தின் கீழ் குறிப்பிட்டுள்ள 25 சதவீதத்திற்கும் மேலாக மாணவர்களை சேர்க்க முடியாது எனவும் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here