Friday, March 29, 2024

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் – மாநில முதல்வர் அதிரடி!!

Must Read

தமிழகம் மற்றும் மத்திய பிரதேசத்தை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இப்போது கேரளாவிலும் அதை போன்றதொரு அறிவிப்பை கேரள முதல்வர் வெளியிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

உயிர்கொல்லி நோயான கொரோனாவுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். கடும் முயற்சிகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு பிறகும் கூட பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் பெரிதாக குறையவில்லை. நோய் தொற்றை தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் உள்ளன.

அதற்கான முயற்சியில் அமெரிக்கா முதலில் இறங்கியது. இந்தியாவில் பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மற்றும் பைசர் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய மூன்று கோவிட் -19 தடுப்பூசிகள் பரிசோதனைக்காக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அளிக்கப்பட்டிருக்கிறது. மூன்று நிறுவனங்களுக்கும் சேர்த்தோ அல்லது யாரேனும் ஒருவருக்கோ முதலில் அனுமதியும் உரிமமும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலவச தடுப்பூசி:

இந்நிலையில் தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்ததும் அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசி வழங்கப்படும் என கேரளா முதல்வர் அறிவித்துள்ளார். அதற்காக எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை எனவும், கூறியுள்ளார். இது சாத்தியமானால் அனைத்து தரப்பினரும் பயனடைவர்.

வித்தியாசமான “மீன் பக்கோடா” ரெசிபி – வீக்எண்டு ஸ்பெஷல்!!

கேரளாவில் 6.64 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதிதாக 5,949 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 5,268 ஆகவும் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,594 ஆகவும் உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -