மாற்றுத்திறனாளிகளுடன் பயணிப்போருக்கு இலவச பேருந்து பயணம்… தமிழக அரசு அறிவிப்பு!!!

0

மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் பயணிக்கும் உதவியாளர் ஒருவருக்கும்  சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவச பயணம் என தமிழக அரசு அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டு உள்ளது.மேலும் அவர்கள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல்  பயணிக்கலாம் என்ற அரசாணையையும் வெளியிட்டு உள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

தமிழக அரசு தனது மாநில மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களையும்  அறிவித்து அதை செயல்படுத்தியும் வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணத்தை அறிவித்து இருந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்திய நிலையில் அன்றாடம் கூலி வேலை செய்யும் பெண்களுக்கு தனது வருமானத்தில் பெரும் பகுதி மிஞ்சுவதாகவும் தெரிவித்து இருந்தனர்.

தற்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் பயணம் செய்யும் ஒருவருக்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவச பயணம் என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்து அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து உள்ளது. மேலும் இந்த கட்டணம் இல்லா பயணத்தின் போது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை  நடத்துனரிடம் காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook   =>Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here