மாற்றுத்திறனாளிகளுக்கு அடித்த ஜாக்பாட்.., இனி இந்த சலுகை உங்களுக்கும் உண்டு.., மாநில அரசு அதிரடி!!!!

0
நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அனைத்து மாநிலங்களிலும் மாதந்தோறும் ஊக்கத்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஊக்கத்தொகையை உயர்த்துவது குறித்து பல்வேறு மாநில அரசுகளும் பரிசீலனை செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது இதைத்தொடர்ந்து டெல்லி அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது ஏற்கனவே டெல்லி மாநிலத்தில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமலில் உள்ளது. தற்போது இத்திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும்  செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இத்திட்டம் குறித்து அமைச்சரவையில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளோம். இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் கூடிய விரைவில் அமல்படுத்துவோம் என டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here