உஷார் மக்களே.., 50 ஜிபி டேட்டாவுக்கு ஆசைப்பட்டு லிங்கை தொட்டுராதீங்க.., காவல்துறை எச்சரிக்கை!!

0
உஷார் மக்களே.., 50 ஜிபி டேட்டாவுக்கு ஆசைப்பட்டு லிங்கை தொட்டுராதீங்க.., காவல்துறை எச்சரிக்கை!!
உஷார் மக்களே.., 50 ஜிபி டேட்டாவுக்கு ஆசைப்பட்டு லிங்கை தொட்டுராதீங்க.., காவல்துறை எச்சரிக்கை!!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியை குறித்து ஒரு தவறான லிங்க் வாட்ஸ் அப்பில் பரவி வரும் நிலையில் இது குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறை தெரிவித்துள்ளது.

பொய்யான தகவல்:

தற்போதைய சூழ்நிலையில் மக்களை வித்தியாசமான முறையில் மோசடி செய்வதை மர்ம நபர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், ஒரு தவறான லிங்கை அனுப்பி, இதை தொட்டால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும் என்று சில பேமஸான கம்பெனி பெயரில் வாட்ஸ்அப் நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த தகவலை நம்பி அந்த லிங்கை கிளிக் செய்தால், நமக்கு தெரியாமல் நம்முடைய பர்சனல் போட்டோ, வீடியோ போன்றவற்றை சில ஹேக்கர்கள் திருடி அதை வைத்து மிரட்டும் அவலம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் புதிதாக ஒரு லிங்க் வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. அதாவது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியை குறித்து ’FIFA உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு 2022 உலகக் கோப்பையைப் பார்க்க 50 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. நான் என்னுடையதைப் பெற்றேன். இதை திறக்கவும்” என குறுஞ்செய்தியுடன் லிங்க் ஒன்று வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆதார் எண்ணை இன்னும் இணைக்கலயா? அப்போ உங்களுக்கு இந்த உதவித்தொகை கட்! அரசு உறுதி!!

மக்கள் 50 ஜிபி டேட்டா -விற்கு ஆசைப்பட்டு இந்த லிங்கை தொட வேண்டாம் என்றும் இது முற்றிலும் பொய்யான தகவல் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் இது குறித்து புகார்களை அளிக்க  https://cybercrime.gov.in/ என்ற வெப்சைட்டில் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here