இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை – 29வது நினைவு தினம் இன்று..!

0

இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைகிறது. உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தை இன்று நினைவு கூர்வோம்.

பிறப்பிலே பெருமை:

இந்தியாவின் தலைசிறந்த முதல் பிரதமர் நேருவின் பேரன், இரும்பு பெண்மணி & நினைவில் நீங்காமல் இருக்கும் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் என பிறக்கும் பொழுதே பல பெருமைகளை சுமந்து வந்தவர் ராஜிவ் காந்தி. அரசியலில் தன்னை சேர்த்துக் கொள்ளாத ராஜிவ் காந்தி இத்தாலியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடன் படித்த சோனியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவரது உடன்பிறந்த சகோதரன் சஞ்சய் காந்தி 1980ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த காரணத்தால் தாய்க்கு துணையாக அரசியலில் நுழைந்தார் ராஜிவ் காந்தி.

இந்திரா காந்தி கொலை:

1984ம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த காரணத்திற்காக வேறு வழியின்றி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பைப் ஏற்றார் ராஜிவ் காந்தி. பின்னர் மக்களால் இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ராஜிவ் காந்தி. தனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவை நவீன பாதையை நோக்கி திருப்பி, கணிதத்துவம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை அதிகரித்தார். ஆனால் அவருக்கும் சோகமான முடிவே காத்திருந்தது.

தமிழகத்திற்கு 1991ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தார் ராஜிவ் காந்தி. அன்று சென்னை அருகே ஸ்ரீபெதும்பூரில் தற்கொலைப்படை தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார். திட்டமிட்டு நடைபெற்ற இந்த சம்பவம் உலக நாடுகளையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த கோர சம்பவம் நடைபெற்று இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைகிறது. தற்போது அவரது மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here