33-வது நாளாக தொடரும் வேளாண் போராட்டம் – விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!!

0

டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஏதிராக போராடி வரும் விவசாயிகளுடன் நாளை அரசு நடத்த இருந்த பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து 33 வது நாளாக போராடி வருகின்றனர். விவசாயிகள் குழுக்களாக பிரிந்து அரசுக்கெதிராக ஒற்றுமையுடன் போராடி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு போராட்ட குழு தலைவர்களுடன் இதுவரை 5 கட்டங்களாக அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை.

delhi protest
delhi protest

இந்நிலையில் நாளை (29/12/2020) மீண்டும் 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த அரசு, விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இவ்வழைப்பை ஏற்ற விவசாய சங்க தலைவர்கள் “அரசு திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என கூறியதுடன்,” வேளாண் சட்டங்களை திரும்ப பெறாமல் போராட்டத்தை கைவிடமாட்டோம்” எனவும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாளை நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை பற்றி அறிய நாடே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் டிசம்பர் 30 அன்று பேச்சவார்த்தை நடைபெரும் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது.
இது குறித்த காரணம் எதுவும் வெளியிடப்படாத நிலையில் இது பல தரப்பிலும் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here