வரலாற்றில் இன்று – “இரும்பு பெண்மணி” ஜெயலலிதா நினைவு தினம்!!

0

தமிழக அரசியல் வரலாற்றில் பொதுமக்களால் இரும்பு பெண்மணி என போற்றப்படும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி சென்னையில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் கட்சித் தொண்டர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் #அம்மா என்ற ஹேஷ்டேக் உடன் ஜெயலலிதா அவர்களின் நினைவுகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அம்மா – ஜெயலலிதா:

எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் பல தடைகள், கேலி, கிண்டல்களை தாண்டி சாதித்தவர்கள் பலர் இருப்பர். ஆனால் அரசியலில், அதுவும் ஒரு பெண்ணாக ஒரு மாநிலத்தையே நீண்ட நாட்கள் ஆட்சி செய்த ஒரு இரும்பு பெண்மணி என்றால் அது ஜெயலலிதா மட்டும் தான். தமிழக மக்களால் அன்புடன் அம்மா என்று அழைக்கப்படும் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சு மட்டும் இன்னும் அவிழ்க்கப்படாமல் உள்ளது. அதற்காக அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி தலைமையிலான விசாரணை குழுவும் ஒன்றும் செய்ததாக தெரியவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் 6 முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா, முதல் நாடாளுமன்ற பெண் உறுப்பினராக 1984ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ் திரையுலகில் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கினார். 1989 இல் எம்எல்ஏ, 1991 இல் முதல்வர் என அடுத்தடுத்து அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத இரும்பு பெண்மணியாக விளங்கினார்.

ஜெயலலிதா வாழ்வில் பல திருப்பங்களை ஏற்படுத்தியது அவருக்கு எதிராக தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு தான். இதனால் ஆட்சியில் இருக்கும் பொழுதே சிறை சென்ற முதல்வர் என்ற அவப்பெயரும் அவருக்கு ஏற்பட்டது. இருப்பினும் தமிழக மக்கள் மனதில் அம்மா ஆக அவர் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அப்பல்லோ மருத்துவமனையில் 74 நாட்களுக்கு மேலாக தொடர் சிகிச்சையில் இருந்த அவர் 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்தார்.

அவரது மறைவு நாளில் தமிழகமே சோகத்தில் மூழ்கியது. தற்போது அவரின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் திருஉருவ படத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் விரைவில் அவருக்கு நினைவு இல்லம் கட்டும் பணிகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here