ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் திடீர் மரணம் – ரசிகர்கள் ஷாக்!!

0

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் ஐ.பி.எல் வர்ணனை பணிக்காக மும்பை வந்திருந்த நிலையில் இன்று திடீரென பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

டீன் ஜோன்ஸ்:

59 வயதான டீன் ஜோன்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் வர்ணனையாளராக பங்கேற்று வந்தார். இம்முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெறுவதால் கொரோனா அச்சம் காரணமாக மும்பையில் உள்ள ஸ்டுடியோவில் ஐபிஎல் வர்ணனையாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் டீன் ஜோன்ஸுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அவரது மறைவு குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டீன் மெர்வின் ஜோன்ஸ் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம், இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். புதிய திறமைகளைக் கண்டுபிடிப்பதிலும், இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பதில் அவர் ஆர்வமாக இருந்தார். அவர் ஒரு சாம்பியன் வர்ணனையாளராக இருந்தார். உலகமெங்கும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என தெரிவித்து உள்ளது.

1984 மற்றும் 1992 ம் ஆண்டுகளுக்கு இடையில் டீன் ஜோன்ஸ் 52 டெஸ்ட் மற்றும் 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 சதங்கள் மற்றும் 14 அரைசதங்களுடன்.3631 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவர் 4 சதங்கள் மற்றும் 46 அரைசதங்களுடன் 604.8 ரன்களை குவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here